Map Graph

யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை

யாழ் இந்து ஆரம்ப பாடசாலை யாழ்ப்பாணம், இலங்கையிலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் குறிப்பிடத்தக்கது. ஆண்டு 1 முதல் 5ம் ஆண்டுவரை இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பாடசாலையிலேயே யாழ்ப்பாணத்தில் அதிக மாணவர்கள் புலமைப்பரிவில் பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறார்கள். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றியவர்கள் அதிபர் திரு தவராஜா அவர்களும் அதிபர் திரு ஞானகாந்தன் அவர்களுமாவர். இங்கு மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதீத அக்கறை காட்டிவருகின்றனர். இங்கு வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி வெகுசிறப்பாக நடைபெறுவதுண்டு இதில் காசிப்பிள்ளை, செல்லத்துரை, நாகலிங்கம், பசுபதி ஆகிய இல்லப்பிரிவுகளில் மாணவர்கள் பங்கு பற்றுவதுண்டு. இவைகள் பாடசாலை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட முன்னய அதிபர்களை கொளரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்கள் இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் கற்கும் இந்த ஆரம்ப பள்ளியில் தகவல்தொழிநுட்பதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Read article
படிமம்:Jaffna-hindu-primary-logo.jpgபடிமம்:Jaffna_hindu_primary_school.JPG